டீ,வடை சாப்பிட்ட 4 இளைஞர்கள் வாந்தி மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி
டீ,வடை சாப்பிட்ட 4 இளைஞர்கள் வாந்தி மயக்கம்;
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கஜேந்திரன் மகன் சதீஸ் (24), சம்பத் மகன் பார்த்திபன்(20). மலர் மகன் வசந்த்(22) சம்பத் மகன், ஹரிஹரன்(23). 4 இளைஞர்கள் இன்று காலை திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ வடை சாப்பிட்டு உள்ளனர். டீ வடை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 4 இளைஞர்களுக்கும் வாந்தி மயக்கம் வந்துள்ளது.
உடனடியாக அவர்களை உறவினர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 4 இளைஞர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருத்துறைப்பூண்டி பகுதியில் சில கடைகளில் சுகாதாரமற்ற வகையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. உடனடியாக சுகாதாரத்துறை உணவு வழங்கல் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.