திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணை தலைவர் பதவியை தட்டி பறித்தது தி.மு.க.

திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத் தலைவர் பதவியை சிபிஎம் மிடம் இருந்து தி.மு.க. தட்டி பறித்து உள்ளது.;

Update: 2022-03-04 12:09 GMT

ஆர்.எஸ். பாண்டியன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடந்தது. இதில்  5 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ். பாண்டியன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார் .இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவிக்கு தி.மு.க. தலைமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமலோகேஸ்வரியை வேட்பாளராக அறிவித்து இருந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை அச்சுறுத்தும் விதமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருந்தது .இந்நிலையில் தி.மு.க.வைச் சேர்ந்த நகர செயலாளர் ஆர் .எஸ். பாண்டியன் தற்போது இப்பதவிக்கு தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News