தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கொரானவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அறிவுரையின்படி இன்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செங்குட்டுவன். நகர அமைப்பு ஆய்வாளர் அருள் முருகன். பொதுப்பணி அலுவலர் விஜயேந்திரன். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காளிதாஸ் .ஆகியோர் திருத்துறைப்பூண்டி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து மற்றும் அரசு மருத்துவமனை, கடைத்தெரு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் காய்கறி சந்தை மார்க்கெட் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுஇடங்களில் கிருமிநாசினி தீயணைப்பு வாகனம் மூலம் தெளித்னர்..