திருத்துறைப்பூண்டி: 111 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கொரோனா நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கினார்;
கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகருக்குட்பட்ட மன்னை சாலையில் உள்ள ரேஷன் கடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பொதுமக்களுக்கு 2000 ரூபாய் வழங்கினார்.
இதேபோல் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 111 ரேஷன் கடைகளிலும் இன்று நிவாரணத் தொகை வழங்கப்படட்டது.