திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக தி.மு.க.வின் கவிதா பாண்டியன் தேர்வு
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த கவிதா பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.;
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் தலைவராக மூன்றாவது வார்டில் வெற்றி பெற்ற கவிதா பாண்டியன் வேட்பாளராக கட்சி தலைமை சார்பாக அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் அவர் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கவிதா பாண்டியன் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரன் அறிவித்து அவருக்கு சான்றிதழ் வழங்கினார்.