4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது தவ்ஹீத் ஜமாத் கட்டிடம்

திருத்துறைப்பூண்டி அருகே நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்டிடம் கோட்டாட்சியர் தலைமையில் இன்று திறக்கப்பட்டது.

Update: 2021-11-21 05:22 GMT

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டியில் திறக்கப்பட்ட தவ்ஹீத் ஜமாத் கட்டிடம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் இயங்கி வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான ரஹ்மத் மர்கஸ் கட்டிடம் கடந்த 2017ல் நீதிமன்ற உத்தரவு பேரில் பூட்டப்பட்டது.

 பின்னர் நீதிமன்றத்தை நாடிய தவ்ஹீத் ஜமாஅத்தினர் கடந்த 2021 பிப்ரவரி மாதம் திறப்பதற்கான உத்தரவை பெற்றனர் இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு படி திறப்பதற்கு 4 வார அவகாசத்தை பேரூராட்சி ஆணையர் வழங்கியும் அலட்சியம் காட்டி வந்த நிலையில், 

  திருவாரூர் நகர ஊரமைப்பு இயக்குனர் அவர்களையும், மாவட்ட ஆட்சியரையும் சந்தித்து கடந்த அக்டோபர் மாதம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மனு அளித்தனர்.

இந்த நிலையில்சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் அலட்சியம் செய்து வந்த அதிகாரிகளை கண்டித்து 22 நம்பரில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தொழுகையும் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணை தலைவர் பா.அப்துல் ரஹ்மான், மாநில செயலாளர் முஜிப் ரஹ்மான், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News