திருத்துறைப்பூண்டியில் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் 100 நாள் வேலை உடனே தொடங்கி வேலை வழங்கக் கோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை உடனே தொடங்கி வேலை வழங்கக் கோரியும், ஜாதி பாகுபாடு காட்டி சம்பளம் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் சமமாக சம்பளம் வழங்கிட வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிய வீடுகள் கட்டித் தரக்கோரியும் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் பாஸ்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் திருத்துறைப் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ரயில்வே ஜங்ஷனில் இருந்து பேரணியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.