கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட துடிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கியுள்ள கர்நாடக அரசை மத்திய அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடக பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.