திருத்துறைப்பூண்டியில் ரூ.78,550 பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

திருத்துறைப்பூண்டியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.78,550 தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-02-07 14:28 GMT

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.78,550

நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. 

இந்நிலையில் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் சோமசுந்தரம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற 78,550 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இப்பணமானது தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News