திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு- காயம் 4
திருத்துறைப்பூண்டி அருகே இரு சக்கர வாகனங்கள் மீது சொகுசு கார் மோதியதில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பின்னத்தூர் பகுதியில் முத்துப்பேட்டை பகுதியில் இருந்து எடையூர் நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் மீது திருத்துறைப்பூண்டியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற சொகுசு கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனங்களில் வந்த பழனிவேல் (வயது52), பாண்டித்துரை (வயது30), பானுபிரகாஷ் (20), ராமச்சந்திரன்(24),முருகப்பா உள்ளிட்ட 5பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மீதமுள்ள நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.