திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ். நிவாரணம்

திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ். நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

Update: 2021-11-17 01:51 GMT

திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வழங்கினார்கள்.

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த கனமழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட   பகுதிகளைநேரில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான கடலூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பகுதியில் ஆய்வு செய்த பின்னர் . திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ராயநல்லூர் கோட்டகம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சரும்  நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான  ஆர்.காமராஜ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

Tags:    

Similar News