திருத்துறைப்பூண்டியில் காவலர் நினைவு தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி
திருத்துறைப்பூண்டியில் தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.;
திருத்துறைப்பூண்டியில் மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் சார்பில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நட்புறவை ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய மாரத்தானை திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மினி மாரத்தான் வேலூர் பாலம் வரை சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. மினிமாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.