திருத்துறைப்பூண்டியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை ஒரு வருடத்தில் சேதம்

திருத்துறைப்பூண்டி அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை ஒரு வருடத்திற்குள் சேதமடைந்ததாக புகார் கூறப்பட்டு வருகிறது.

Update: 2022-03-20 09:22 GMT

மோசமான சாலை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலத்திலிருந்து ஓவர்குடி கிராமம் வழியாக வங்கநகர், ஓவரூர் வெள்ளங்கால், உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை கடந்த வருடம் பிரதம மந்திரி கிராம சாலை 2018-19 திட்டத்தின் கீழ் 231.58 இலட்சம் மதிப்பில் போடப்பட்டது.

கடந்த ஆண்டு பெய்த மழையால் சாலை சேதமடைந்தது. தினந்தோறும் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 1000த்திற்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். புதிதாக போடப்பட்ட சாலை ஒரு வருடத்திலேயே சேதமடைந்ததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அவசர தேவைக்காக மருத்துவமனை செல்லவதற்கு இவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News