திருத்துறைப்பூண்டியில் புதிய காய்கறி சந்தை அமைப்பது பற்றி ஆய்வு
திருத்துறைப்பூண்டியில் புதிய காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது பற்றிய ஆய்வு நடைபெற்றது.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்ப்பகுதியின் நீண்டநாள் கோரிக்கையான காய்கறி சந்தை அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ .கே. எஸ் .விஜயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை விருந்தினர் இல்லத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் கலந்து கொண்ட அவர் மக்களிடமிருந்து குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் , நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட அரசு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.