திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

நெல் ஜெயராமன் நினைவு தினத்தையொட்டி பாரம்பரிய நெல்லால் சமைக்கப்பட்ட உணவு அன்னதானம் செய்யப்பட்டது

Update: 2021-12-07 00:30 GMT

 நரிக்குறவரின மக்களுக்கு பாரம்பரிய நெல்லில் சமைக்கப்பட்ட உணவு வழங்கி நெல் ஜெயராமன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதற்காக போராடிய நெல் ஜெயராமன் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்துறைப்பூண்டியில் அவரது உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வீரா நகரில் குடியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவரின மக்களுக்கு பாரம்பரிய நெல்லில் சமைக்கப்பட்ட உணவு வழங்கி நெல் ஜெயராமன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆதிரங்கம் நெல் பாதுகாப்பு மைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் மற்றும் நெல் ஜெயராமன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News