முத்துப்பேட்டை மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் துறைக்காடு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2022-01-19 09:40 GMT

முத்துப்பேட்டையில் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் துறைக்காடு மீனவ கூட்டுறவு சங்க நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் மீனவர் பிரிவு சார்பில் மீனவள உதவி ஆய்வாளர் அலுவலகம் முன்பு பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் 20 வயதில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்பவரை பல தடவை மனு கொடுத்தும் உறுப்பினராக சேர்க்காத  z238 மீனவர் கூட்டுறவு சங்கத்தை கண்டித்தும், மீன் பிடிக்கச் செல்பவர்கள் உறுப்பினராக வேண்டுமானால் கையூட்டு தர வேண்டும் என்று சொல்லுகின்ற துறைக்காடு மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கத்தை கண்டித்தும், உண்மையாக மீன் பிடிக்க சென்றவர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்காத துறைக்காடு மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News