ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்கின்ற ஆர்வம் பொதுமக்களிடத்தில் உள்ளது என இரா. முத்தரசன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி வேலூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும் போது, 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும் 6.55 மணிக்கே பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர். மக்களின் இந்த மிகுந்த ஆர்வம் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. திமுக கூட்டணி இந்த தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றார்.