திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்களை எம்எல்ஏ ஆய்வு

திருத்துறைப்பூண்டியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு சிறு பாலங்களை எம்எல்ஏ மாரிமுத்து ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-04-09 10:53 GMT

பாலம் கட்டும் பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மாரிமுத்து

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க ரயிலடி பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம்  வரை கழிவுநீர் வடிகால் அமைக்கவும் மூன்று சிறு பாலங்கள் 1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.

பழைய பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் வெளியேற இரண்டு சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை எம்எல்ஏ மாரிமுத்து, நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். திமுக நகர செயலாளர் பாண்டியன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News