திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் கடத்தியவர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே பைக்கில் சாராயத்தை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகே கொக்கவாடி அரக்கரை வீரன் கோவில் பின்புறம் உள்ள இடுகாடு அருகில் பாண்டிசேரி சாராயம் விற்பனை செய்வதற்கு பைக்கில் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், எஸ்எஸ்ஐ புஷ்பநாதன், காவலர்கள் பாலமுருகன், முத்துமணி ஆகியோர் அந்த வழியாக பைக்கில் சாக்குமூட்டை வைத்து கொண்டு வந்த நபரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கொக்கலாடி மெயின்ரோடு கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வெற்றிவேல்(51) என்பது தெரியவந்தது. பைக்கில் வைத்திருந்த வெள்ளைநிற சாக்கு மூட்டையை சோதனையிட்டதில் அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராயம் சுமார் 110 லிட்டர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறப்பு உதவி ஆய்வாளர் புஷ்பநாதன், காவலர் முத்துமணி ஆகியோர் கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை கைப்பற்றி அங்கேயே கீழே ஊற்றி அழித்தனர்.
கொக்கவாடி அரக்கரை பகுதியில் சாராயம் கடத்தி வந்த வெற்றிவேல்.