திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-27 06:38 GMT

மது பாட்டில்களுடன் பிடிபட்டவர். 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பொன்னிறை பகுதியில் குமரேசன் என்பவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் கிடைத்ததன் பேரில் ஆலிவலம் காவல்துறையினர், குமரேசனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களில் மதிப்பு 15,000 எனவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஆலிவலம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News