12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்

திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கு மேல், தடையை மீறி திறந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு அபராதம்.

Update: 2021-05-12 15:45 GMT

தமிழ்நாடு முழுவதும் கொரானா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் காலை 6 மணி முதல் அத்தியாவசிய தேவைகளான காய்கறி கடைகள் மளிகை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டது. பால் மருந்துகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கு மேல் திறந்து கடைகள் மற்றும் அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் நிதி நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்து மூடப்பட்டது. முககவசம் இன்றி வந்த பொதுமக்களும் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. 

தனியார் நிதி நிறுவனத்திற்கு 5000 அபராதமும், அனுமதி இன்றி செயல்பட்ட ஜவுளிக்கடை, பெட்டி கடை, காய்கறி கடைகளுக்கு தலாரூ 1000 வீதமும் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ 200 வீதம் மொத்தம் ரூ 55,000 வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News