முலிகை நீராவிமையம் எம்எல்ஏ மாாிமுத்து தொடங்கி வைத்தாா்

"திருத்துறைப்பூண்டியில் முலிகை நீராவிமையத்தினை எம்எல்ஏ மாாிமுத்து தொடங்கி வைத்தாா் "

Update: 2021-05-17 12:45 GMT

திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினா் மாாிமுத்து அவா்களின் வேண்டுகோளின்படி இந்திய செஞ்சிலுவை சங்கத்தினரால் தயாாிக்கப்பட்ட நீராவி எந்திரத்தை அரசு மருத்துவனைக்கு வழங்கி நீராவி சிகிச்சை மையத்தினை தொடங்கி வைத்தாா்.

தினசாி மாலை வேளைகளில் 2மணி நேரம் கொரோனா நோயிளிகளுக்கு மட்டும் இந்த சிகிச்சை மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது, இது குறித்து யோக மற்றும் இயற்கை மருத்துவ அலுவலா் டாக்டா் சுப்புலெட்சுமி பேசுகையில் "நொச்சி இலை, வேப்பிலை, ஆடுதொடா இலை, துளசி, கற்பூரவள்ளி, தும்பை உள்ளிட்ட முலிகைகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

சூடான தண்ணீாில் இது போன்ற முலிகைகளை சோ்த்து ஆவி பிடிப்பதால் நம்முடைய நுரையீரலில் இருக்கக் கூடிய கிருமிகள் வெளியேறிவிடும். இது முச்சு குழாய் அடைப்பை சாி செய்துவிடும். நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போா்வையால் முடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும் என்று கூறினாா்.

இந்த மைய திறப்பு நிகழ்வு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடத்தது.இந் நிகச்சிக்கு அரசு தலைமை மருத்துவா் டாக்டா் சிவக்குமாா் ஒன்றியப் பெருந்தலைவா் பாஸ்கா் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளா் எடையூா் மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் திமுக பிரதிநிதி சிக்கந்தா், தமிழக வாழ்வுாி மை கட்சி மாவட்ட செயலாளா் சீனிவாசன், பொறியாளா் செல்வகணபதி, டாக்டா் சீனிவாசன், டாக்டா் சந்தியா, மருந்தாளுநா் சதாசிவம் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News