திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வினியோகம்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2022-03-21 11:25 GMT
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று பேரிடர் காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவின் மருத்துவ தேவைக்காக பல்வேறு அமைப்பினர் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலான கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ராஜரத்தினம்,தலைமை மருத்துவ அலுவலர் சிவக்குமார், நகர்மன்றத் தலைவர் கவிதா பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News