திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-30 13:37 GMT

விக்னேஷ்வரன்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை விசாரித்தபோது  முன்னுக்குப்பின் பதிலளித்துள்ளார்.

விசாரணையில், திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் கீழத்தெரு பகுதியை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன் (26) என்பது தெரியவந்தது. அப்போது அவரை சோதனை செய்தபோது விற்பனைக்காக 1.கிலோ 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும்  தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த திருத்துறைப்பூண்டி போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News