திருத்துறைப்பூண்டியில் முழு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க காேரி விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்.

Update: 2022-01-07 09:39 GMT

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி பயிர்கள் தொடர் மழையால் சேதமடைந்த நிலையில் நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் வழங்கிட வேண்டும், மழை பாதிப்பால் வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 5000 நிவாரணம் வழங்கிட வேண்டும்,மழை வெள்ளப் பாதிப்பில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கிட வேண்டும்,எஞ்சிய பயிர்கள் மற்றும் கோடைகால பல்வகை சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரசாயன உரங்கள் விற்பனை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையம் அருகே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாக திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News