திருத்துறைப்பூண்டி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று செய்தார்.;
தமிழக அரசால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கச்சனம் பகுதியில் ரூ.17.85 லட்சம் மதிப்பீட்டில் கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்ததையும், பூசலாங்குடி பகுதியில் ரூ.121.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து விளக்குடி ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.12.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வளர்ச்சி திட்ட ஆய்வு பணியின்போது திட்ட இயக்குநர் தெய்வநாயகி, ஊரக வளர்ச்சித்துறையின் செயற்பொறியாளர் குமார், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.