திருத்துறைப்பூண்டி அரசு மன நல காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்
Mananala Kappagam-திருத்துறைப்பூண்டியில் தன்னார்வ அமைப்பு சார்பில் நம்பிக்கை மனநல காப்பகத்தில் இனிப்புகளுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது.;
திருத்துறைப்பூண்டியில் உள்ள மன நல காப்பகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
Mananala Kappagam-திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நம்பிக்கை மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இன்றைய தினம் திருத்துறைப்பூண்டியில் தனியார் தன்னார்வ அமைப்பு சார்பில் இந்த மனநல காப்பகத்தில் உள்ள 30க்கும் மேற்பட்டோருக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் வழங்கப்பட்டது. மேலும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2