திருத்துறைப்பூண்டியில் உடல் நலம் காக்க சைக்கிள் ஓட்டுதல் பற்றிய பேரணி

திருத்துறைப்பூண்டியில் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-02-23 14:37 GMT

திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் தன்னார்வ அமைப்பு மற்றும் காவல் துறை சார்பாக சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.மன்னார்குடி சாலையில் இருந்து துவங்கிய  சைக்கிள் பேரணியை திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம்  கொடியசைத்து துவக்கி வைத்தார் .

தினந்தோறும் சைக்கிள் ஓட்டுவதால் இதய அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆயுள் காலம் 70 வயது வரை நீட்டிக்க வாய்ப்பு, அதுமட்டுமல்லாமல் உடல் பருமன் சீராக வைக்க உதவுகிறது. முக்கியமாக கேன்சர் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது  என்பதை விளக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த சைக்கிள் பேரணி பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாகை சாலை வழியாக பட்டுக்கோட்டை சாலை வரை சென்று முடிவடைந்தது. இதில்  கல்லூரி மாணவர்கள்  தன்னார்வ அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News