திருத்துறைபூண்டியில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்
திருத்துறைப்பூண்டியில் சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடம் போலீசார் எடுத்து கூறி பிரசாரம் செய்தனர்.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் மாவட்ட காவல்துறை, சைபர் கிரைம் காவல் நிலையம் , திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஏ.டி.எம். சி வி. வி நம்பர் ,ஆதார் கார்டு எண்ணை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எவரிடமும் பகிரக்கூடாது ,உங்கள் ரகசிய குறியீடு எண்ணை கடன் பற்று அட்டை மீது குறித்து வைத்துக் கொள்ளக்கூடாது.
எக்காரணம் கொண்டும் முன்பின் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கியில் இருந்து அனுப்பப்படும் நான்கு இலக்க ஓ.டி.பி. எண்ணை கொடுத்து விடக்கூடாது உள்ளிட்ட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை காவல்துறையினர் ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர் .
இதுபோன்ற சைபர் குற்றங்களுக்கு 155260 என்ற உதவி எண்ணை அழைக்கவும் என்று எடுத்துக் கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி புதிய பேருந்து நிலையம் வரை சென்று முடிவடைந்தது.இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பயிற்சி காவல் துணைகண்காணிப்பாளர் பார்த்திபன் திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் கழனியப்பன், உதவி காவல் ஆய்வாளர் சுரேந்திரன், உள்ளிட்ட காவல்துறையினர் தன்னார்வ அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.