திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத்தலைவராக ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்வு.

திருத்துறைப்பூண்டி நகர் மன்றத் துணை தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சிபிஎம் கட்சியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Update: 2022-03-26 11:53 GMT

 திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயபிரகாஷ் 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு இன்று மறைமுகதேர்தல் நடைபெற்றது.

இதில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 24 வது வார்டில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபிரகாஷ் என்பவர் நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக  கட்சி தலைமை அறிவித்திருந்த நிலையில்,  இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றார் . வெற்றி பெற்ற அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன், திமுக நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான பாண்டியன் மற்றும் அனைத்து கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News