திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டப்பணிகள் தொடக்கம்

திருத்துறைப்பூண்டியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-03-07 13:17 GMT

திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தமிழ்நாடு நகர புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 24- வது வார்டில் வாய்க்கால்கள் 600 மீட்டர் மற்றும் மாரியம்மன் கோவில்குளத்திற்கு வரும் வடிகால் சீரமைக்கும் பணிகள் திட்ட தொடக்க விழா சிங்கிளாந்தில் நடைபெற்றது.

நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், கவுன்சிலர்கள் ஜெயபிரகாஷ், லட்சுமி முன்னிலை வகித்தனர்.

எம்.எல்.ஏ. மாரிமுத்து திட்டம் குறித்தும் விளக்கி பேசி திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் .

இதில் நகராட்சி ஆணையர் (பொ) சரஸ்வதி, ஓவர்சியர் விஜயேந்திரன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சை மண்டலத்தில் உள்ள 20 நகராட்சிகளில் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குமட்டும்தான் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News