திருத்துறைப்பூண்டியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சி.ஐ.டி.யு வின் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆறு மாதத்திற்கும் மேலாக பிஎஃப் தொகை வழங்கப்படாததை கண்டித்தும்,
கூட்டுறவு கடன்களை தூய்மை பணியாளர்கள் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வரவு வைக்கப்படாததை கண்டித்தும,
தாட்கோ கடன் மாத தவணையை மாதந்தோறும் தூய்மை பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக வரவு வைக்கப்படாததை கண்டித்தும்,
குப்பை அல்ல வாகனங்கள் மற்றும் சாக்குகள் வழங்கப்படாததை கண்டித்தும், டெங்கு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது