திருத்துறைப்பூண்டியில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில், ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
சிஐடியு நகர செயலாளர் பாரதிதாசன் நகர தலைவர் ஆரோக்கியராஜ், நகர பொருளாளர் தாஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் சிபிஐ ஒன்றியசெயலாளர் பாலு நகர செயலாளர் முருகேசன், ஏஐடியூசி நகர பொருளாளர் வாசுதேவன், ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.