திருத்துறைப்பூண்டியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் பிடிபட்டார்
திருத்துறைப்பூண்டியில் பட்டப்பகலில் பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர் .;
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உப்பூர் காசடி கொல்லை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 42.) இவர் அடிக்கடி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றையதினம் உறவினர் இறப்பிற்காக திருத்துறைப்பூண்டி வந்துள்ளார் .ஊருக்கு திரும்பிச் செல்ல பணமில்லாத நிலையில் திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதி வழியே நடந்து சென்றார்.
அப்பொழுது பூட்டிய வீட்டை கண்டு அவர் அந்த வீட்டின் பின்பக்கமாக சென்று பின்பக்க கதவை திறந்து வீட்டில் இருந்த பீரோவில் இருந்து இரண்டு வளையல் மற்றும் இரண்டு மோதிரங்களை எடுத்துள்ளார். அப்போது வீட்டின் உரிமையாளர் வீட்டின் வாசல் பகுதி வழியாக உள்ளே வந்த பொழுது இவரைக் கண்டு 'திருடன் திருடன்" என்று அலறியதை கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரிடம் இருந்து திருடப்பட்ட இரண்டு வளையல் மற்றும் இரண்டு மோதிரங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.