உக்ரைனில் தவிக்கும் மாணவர் குடும்பத்திற்கு பா.ஜ.க சார்பில் ஆறுதல்

உக்ரைனில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர் சந்தோஷ் ரூபன் வீட்டிற்கு பா.ஜ.க. சார்பில் ஆறுதல் கூறப்பட்டது.;

Update: 2022-03-03 13:09 GMT

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவரின் பெற்றோருக்கு  பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் ஆறுதல் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அம்மளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் சந்தோஷ் ரூபன் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிறார்.இந்நிலையில் அவரது வீட்டிற்கு பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து மாணவர் சந்தோஷ் ரூபன் குறித்து கேட்டறிந்தார் .பின்னர் மத்திய அரசு இந்திய மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், நம்பிக்கையுடன் கவலைப்படாமல் இருக்கவும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

வீட்டிலிருந்தபடியே மாணவர் சந்தோஷ் ரூபனுக்கு செல்போன் மூலமாக வீடியோ காலில் பேசினார். அப்போது பாதுகாப்பாக இருக்கவும் விரைவில் இந்தியா வருவதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாணவரிடம் தெரிவித்தார். மேலும் உதவிகள் வேண்டும் என்றாலும் தொடர்பு கொண்டு பேசவும் என்றும் மாணவருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராகவன், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News