முத்துப்பேட்டை லகூன் பகுதியில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொட ங்கியது
முத்துப்பேட்டை லகூன் பகுதியில் நடைபெற்று வரும் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் 1.50 லட்சம் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த முத்துப்பேட்டை லகூன் எனப்படும் அலையாத்திக்காடுகள் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள பறவை கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது இந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. முதல் கட்டமாக அலையாத்தி காடுகளில் நடைபெற்றுவரும் இப்பணியில் தற்போது வரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது .இதில் பூநாரை, உள்ளான், சிறகு வகைகள் உள்ளிட்ட பறவைகளிடம் அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுக்கும் பணியில் முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிரேஜ், தலைமை வன பாதுகாவலர் சதீஷ்,மாவட்ட வன அலுவலர் அறிவொளி உள்ளிட்ட வன பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.