திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டிகள் பறிமுதல்

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டி இரண்டு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update: 2022-02-14 01:15 GMT

பறிமுதல் செய்யப்பட்ட கடல் வரிமட்டி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வாட் இஸ் பகுதியில்,  அரசினால் தடை செய்யப்பட்ட கடல் வரிமட்டி 2 மூட்டைகள் இலங்கை கடத்தப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி,  அப்பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு வந்த பேட்டை பகுதியை சேர்ந்த சந்தியாகு மற்றும் பவுன்ராஜ் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த இரண்டு மூட்டை வரிமட்டி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட வரி வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News