கொரானா வேடமிட்டு நூதன முறையில் விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டியில் கொரோனா வேடமிட்டு நூதன முநையில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

Update: 2021-05-06 16:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கொரானா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது இந்நிலையில் இன்றைய தினம் முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு காய்கறி மளிகை உள்ளிட்ட கடைகள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது

திருத்துறைப்பூண்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன திறக்கப்பட்ட மளிகை காய்கறி டீக்கடை களும் சரியாக 12 மணிக்கு அடைக்கப்பட்டன

அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என வருவாய் துறையினரும் காவல்துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர் போக்குவரத்து காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

நகராட்சி ஊழியர் கொரானா கிருமி வேடமிட்டு முக கவசம் அணியாமல் சென்ற அவரை கட்டிப்பிடித்து கை குலுக்கியும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியும் பேருந்து மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

பேருந்துகளில் குறைந்த அளவே பயணிகள் பயணம் செய்தனர் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை காசுக்கடை தெரு என பரபரப்பான பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

Tags:    

Similar News