திருத்துறைப்பூண்டி அருகே அரசு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி
திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது.;
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லாத இடத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கடையின் சுவற்றில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் .
சுவற்றை முழுமையாக உடைக்க முடியாத நிலையில் கொள்ளை முயற்சியை கைவிட்டு மர்ம நபர்கள் சென்றுள்ளனர் .கடையில் பணிபுரிவோர் இன்றையதினம் கடையைத் திறந்த பொழுது சுவற்றின் துளையிட முயற்சி செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் திருத்துறைப்பூண்டி தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.