திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா

திருத்துறைப்பூண்டியில் விமரிசையாக நடைபெறும் அந்தோணியார் பொங்கல் விழா கொரோனா காரணமாக இந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது.

Update: 2022-01-17 17:20 GMT
திருத்துறைப்பூண்டி அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் அந்தோணியார் பொங்கல் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் .

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக  அவரவர்கள் இல்லத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பானைகளை அந்தோணியார் ஆலயத்திற்கு எடுத்து சென்று  பங்குத் தந்தை தாமஸ் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொடர்ந்து  புனித நீர் தெளித்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழியவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் சர்வ மதத்தை சேர்ந்த 100க்கும் மேற்கொண்டார் பங்கேற்றனர்.

Tags:    

Similar News