உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி

திருத்துறைப்பூண்டி அருகே உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது

Update: 2022-02-13 16:30 GMT

 பறவைகள் குறித்து இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் பணி முத்துப்பேட்டை வனச்சரகம் வானச்சரக அலுவலர் தாஹிர் அலி  தொடக்கி வைத்தார்

திருவாரூர் மாவட்டம், உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கே கூடுகள் அமைத்து குஞ்சுகள் பொரித்து மீண்டும் திரும்பிச் செல்லும். இந்த ஆண்டு வந்துள்ள பறவைகள் குறித்து இரண்டாம் கட்ட கணக்கெடுக்கும் பணி முத்துப்பேட்டை வனச்சரகம் வானச்சரக அலுவலர் தாஹிர் அலி மற்றும் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி விலங்கியல் ஆகியோர் கலந்துகொண்ட இப்பணியை வனதுறை பேராசிரியர் முனைவர் ஜெயக்குமார் தொடங்கியது.



இந்த கணக்கெடுப்பில் சுமார் 80 வகையான 30,000 பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக நத்தைகொத்தி நாரை மற்றும் வெள்ளை அரிவாள் மூக்கன் அதிக எண்ணிக்கையில் உள்ளது. மேலும் ஐரோப்பாவிலிருந்து வலசை வரும் ரோசி ஸ்டார்லிங் என்ற பறவை சுமார் 500 முதல் 1000 வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

உதயமார்தாண்டபுரத்தில அமைதியான சூழல், உணவு செரிந்த விளைநிலங்கள் வன அலுவலர்களின் பாதுகாப்பு மற்றும் உள்ளுர் மக்களின் ஒத்துழைப்பால் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பறவைகள் கூடு அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் ஏவிசி கல்லூரி மாணவர்கள் மற்றும் பல தன்னார்வலர்கள் இக்கணக்கெடுப்பில் பங்கேற்று கணக்கெடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News