திருத்துறைப்பூண்டி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென மயங்கி விழுந்து பலி யானார்.;

Update: 2022-04-21 13:17 GMT
திருத்துறைப்பூண்டி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் பலி

கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இயந்த மீனவர்.

  • whatsapp icon

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கீழ வாடியக்காடு இடும்பாவனம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சந்திரசேகரன். இருவரும் நேற்று காலை மீன்பிடிக்க தொண்டியக்காடு முணாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று மேல கடைசி தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சந்திரசேகரன் திடீரென மயங்கி படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது தந்தை சுப்பிரமணியன் பார்த்தபோது சந்திரசேகரன் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார்.

உடனே கூச்சலிட்ட போது அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் வந்து பார்த்தபோது சந்திரசேகரன் இறந்தது குறித்து கடலோர காவல்படை தகவல் தெரிவித்ததின் பேரில் விரைந்து வந்த கடலோர காவல் பாதுகாப்பு குழும ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் ரகுபதி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் தர்மதுரை ஆகியோர் பலியான சந்திரசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சந்திரசேகரனுக்கு நித்தியா (வயது30)என்ற மனைவியும் விஷாலினி(வயது10) யாழினி(வயது7) என்ற இரு மகள்களும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News