திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-26 13:15 GMT

கடல் வரிமட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை லகூன் பகுதியில் கடல் வரிமட்டி கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந்த படகினை சோதனை செய்தபோது படகில் கடத்தலுக்காக கடல் வரிமட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.

கடத்தலில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்ததங்கராசு (50), மகேந்திரன்( 63 ) ,கருப்பையன் (67), பழனியப்பன்( 55), ராஜலிங்கம் (70) ,முத்துப்பேட்டை ராமன் கோட்டகம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (42),செல்வராஜ் (50), ராமையன்( 45) ஆகிய 8 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து பல ஆயிரம் மதிப்புள்ள 46 கிலோ வரிமட்டி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 8 பேரையும் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ள நிலையில் மேலும் 8 பேரை வனத்துறையினர் தேடிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News