சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்தநாள் விழா
திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விவசாய தொழிலாளர்களுக்காக போராடிய தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டியில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் சீனிவாசராவின் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் , நகராட்சி தலைவர் கவிதாபாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதில் அரசு அலுவலர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.