ஏப் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்-முதல்வர்

Update: 2021-03-18 12:15 GMT

டெல்டா விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என திருத்துறைப்பூண்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது, விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்காத அரசாக திமுக அரசு இருந்துள்ளது. விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க கூடிய அரசாக அதிமுக அரசு உள்ளது. தமிழகம் மின் மிகை மாநிலமாக விளங்குகிறது. 2019ம் ஆண்டு நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் 5 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றியும் தெரியாது. அவர்களின் கஷ்டத்தை பற்றியும் தெரியாது.

டெல்டா விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு, கட்டணம் இல்லாமல் வழங்கப்படும் சொந்த வீடு கட்ட நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றார்.

Tags:    

Similar News