விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்: வேளாண்துறை செயலர்

இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங்பேடி திருத்துறைப்பூண்டியில் பேட்டி.

Update: 2021-01-22 07:15 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த வடகாடு கோவிலூர், கள்ளிக்குடி, எடையூர், சிங்கலாந்தி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சேதமடைந்துள்ள பயிர்களின் நிலை குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது,

தமிழக அரசின் உத்தரவின்படி சேதமடைந்துள்ள பயிர்கள் வேளாண் துறை மூலம் கணக்கிடப்பட்டு ஜனவரி 29-ஆம் தேதிக்குள் வருவாய் நிர்வாக ஆணையரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் முழுமையாக இழப்பீட்டு தொகையை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அதிகாரிகள் விவசாயிகளின் பக்கமே உள்ளோம் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மூலம் உரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு பெற்று தருவோம் என தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் ஹேமா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News