திருத்துறைப்பூண்டியில் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயலருமான தா. பாண்டியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.