நன்னிலம் அருகே 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை

திருவாரூர் அருகே ஐ.எஸ்.ஆர் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 4- வயது முதல் 18- வயது வரை உள்ள மாணவ மாணவியர்கள் நோபல் உலக சாதனை படைத்தனர்.;

Update: 2022-03-05 13:02 GMT

சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்.

திருவாரூர் அருகே ஐ.எஸ்.ஆர் மார்டியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் 4- வயது முதல் 18- வயது வரை உள்ள மாணவ மாணவியர்கள் நோபல் உலக சாதனை படைத்தனர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் இன்று காலை துவக்கி வைத்த இந்த நோபல் உலக சாதனை நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக சாதனையான 1.30 மணி நேரம் சிலம்பம் சுற்றியதை முறியடித்து 300 மேற்பட்ட மாணவர்கள் இரண்டு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தினர்.

சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர்.காமராஜ் கலந்துகொண்டு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி அனைவரையும் பாராட்டினார்.

Tags:    

Similar News