நன்னிலம் அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார கேடு

நன்னிலம் அரசு மருத்துவமனை அருகே கழிவுகள் கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-12-08 14:47 GMT

நன்னிலம் அரசு மருத்துவமனை.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவமனை, நன்னிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது.

நன்னிலம் மற்றும் சன்னாநல்லூர், ஆண்டிபந்தல், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதியிலிருந்து தினந்தோறும் சுமார் 1000 பேர் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தற்பொழுது, 'கொரோனா' வார்டும் செயல்பட்டு வருகின்ற நிலையில் மருத்துவமனையின் 'கழிவுகள்' அருகே உள்ள சாலையில் கொட்டப்பட்டு வருகிறது.


இதனால், அந்த வழியாக செல்லும் கால்நடைகள் கழிவுகளை உண்பதற்கு வாய்ப்புள்ளதாகவும். மேலும் கழிவுகளால் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நன்னிலம் பகுதியில் சுமார் 11 குளங்கள் உள்ள நிலையில் அந்த குளங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நன்னிலம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் செல். சரவணன் சொல்லும்போது 'மருத்துவமனையின் அருகே உள்ள சாலையில் கழிவுகள் கொட்டப்பட்டுவருகிறது. அருகிலுள்ள குளம் சாக்கடையாக மாற வாய்ப்புள்ளது. மேலும் நன்னிலம் பகுதிகளில் உள்ள குளங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால். தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.

Tags:    

Similar News