குடவாசல் அருகே வாகன சோதனையில் ரூ. 17.20 லட்சம் பணம் பறிமுதல்

குடவாசல் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் ரூ. 17.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-22 06:31 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் நியாஸ்கான் உள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மாவட்ட எல்லையான அத்திகடை செக்போஸ்டில் நேற்று குடவாசல் போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வேகமாக கும்பகோணம் நோக்கி வந்த நபரை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் அவர் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் மஜீது மகன் நியாஸ்கான்(35) என்பதும் கையில் வைத்திருந்த பையில் ரூ. 17 லட்சத்து 20ஆயிரம்  ரொக்க பணம் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த பணம் எவ்வாறு வந்தது என கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து ஹவாலா பணமாக இருக்க வாய்ப்பு இருப்பதால் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

Tags:    

Similar News